
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வடக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ந.தினேஷ்குமார் அவர்கள், வடக்கு மாநகர செயலாளர் ஈ.தங்கராசு அவர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 7 வது வார்டு பகுதியிலுள்ள போயம்பாளையத்தில் வார்டு செயலாளர் ஆர்.ஆர். செல்வராஜ் தலைமையில் பேருந்து நிறுத்தம் முன்பாக பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை திமுகழக நிர்வாகிகள் வழங்கி கொண்டாடினா்.
இந்நிகழ்வில் பாண்டியன் நகர் பகுதி செயலாளர் வே.ஜோதி, அவைத்தலைவர் தயானந்தம், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், 7 வது வட்ட கழக நிர்வாகிகள் மணி, வீரேஸ்குமார், மாறன், யுவராஜ், கோபாலகிருஸ்ணன், பாலசுப்பிரமணியம், பால்ராஜ், சக்திநகர் ஆறுமுகம் , பன்னீர் செல்வம், சன்கார்த்தி, மனோகர் மற்றும் நிர்வாகிகளும், உள்ளிட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.