
மாவட்டத் தலைவர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மத்திய கொண்டுவந்த லால்பேட்டையில் வஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் பாரத பிரதமர் மோடி அவர்களின் உருவ பொம்மை யை தீ வைத்து எரித்தனர்
இத்தகவல் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தெரிய வரவே
கடலூர் மேற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழழகன் தலைமையில் மறியல் போராட்டம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்
அனைவரும் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று கூடினர்
தொடர்ந்து மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆண்கள் பெண்கள் என திடீரென கோஷமிட்டு உருவப் பூமியை எரித்தவரை உடனடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்
பின்னர் சேர்த்து தொப்பட்டி எஸ் பி விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் போராட்டம் செய்தவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் பின்னர் ஆறு மணி அளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்
இந்நிகழ்ச்சியில் மாநில பட்டியலென துணைத் தலைவர் சரவணகுமார் ஒன்றிய தலைவர் தெற்கு சக்தி முருகன் வடக்கு சுரேஷ்குமார் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய முன்னாள் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்
இதனால் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலைய வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது