திருப்புவனம் அருகே மின்வாரியம் பெயரில் மோசடி – வீடு வீடாக 50 ரூபாய் வசூல் செய்த பெண்களை தேடும் பொதுமக்கள்!

திருப்புவனம் அருகே மின்வாரியம் பெயரில் மோசடி – வீடு வீடாக 50 ரூபாய் வசூல் செய்த பெண்களை தேடும் பொதுமக்கள்!

திருப்புவனம் அருகே தமிழக மின்வாரியத்தின் பெயரை கூறி, வீடுவீடாக சென்று 50 ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெண்களை பொதுமக்கள் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் மற்றும் வன்னிகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்ற 2 பெண்கள், தாங்கள் மின்சார வாரியத்தில் இருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பின்னர், வீட்டு மின் இணைப்பு பெட்டியில் 11 இலக்க எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என கூறி, 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 50 ரூபாய் பணம் வசூலித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரியத்தில் விசாரித்தபோது வந்தவர்கள் மோசடி பேர்வழிகள் என தெரிய வந்தது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மோசடி பெண்களை தேடிய போது அவர்கள் மாயமாகிவிட்டனர்.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *