
திருப்பத்தூர் – அக் -25
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று தென்னக இரயில்வே நிர்வாகம் சார்பில் அம்ரித் பாரத் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பொது கழிப்பிடம் வசதியை ஏற்படுத்த வேண்டும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயணிகளின் நலன் கருதி மின் தூக்கி உடனடியாக அமைக்க வேண்டும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த போதிய இடம் அமைக்க வேண்டும், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு என தனியாக முகப்பு அமைக்க வேண்டும், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் திருப்பத்தூர் வரை இயக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் உதவி பொறியாளர்கள் ராமகிருஷ்ண, ராதாகிருஷ்ணன், ஷியமல் குமார் கூஸ்,நீயாவுதீன், ஜோலார்பேட்டை ரயில் நிலைய மேலாளர் பூபதி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

