
வாணியம்பாடி : செப் – 02
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா ஆலங்காயம் ஒன்றியம் பெரியகுரும்பத்தெரு விஜிலாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு இன்று காலை 10 மணியளவில் ஆர்.ஆர்.மஹால் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேசன், மலர்க்கொடி குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி மற்றும் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு ஒன்றிய குழு உறுப்பினர் சாதசிவம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, சூரவேல் வாணியம்பாடி தாசில்தார் சுதாகர் தாட்கோ மண்டல அலுவலர் சரளா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரோஸ் பரமசிவம், மோகன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

