
சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடமாகவும் நகராட்சியாக சிவகங்கை இருந்தும் அதற்கான தகுதியை பெறாத நிலையிலேயே உள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் (19.08.2025) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்ட நிலையில்
சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக நகராட்சியாக சிவகங்கை இருந்தும் அதற்கான தகுதியை பெறாத நிலையிலேயே உள்ளது.
சிறப்பு நிலை நகராட்சியாக மாற ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேல் இருக்க வேண்டும். தேர்வு நிலை நகராட்சியாக மாற ரூ. 15 கோடி வரை வருவாய் இருக்க வேண்டும். முதல் நிலை நகராட்சியாக மாற ரூ. 9 கோடி வரை வருவாய் இருக்க வேண்டும். இரண்டாம் நிலை நகராட்சியாக மாற ரூ.6 கோடிக்கு மிகாமல் வருவாய் இருக்க வேண்டும் .
சிவகங்கை நகராட்சியின் கீழ் 27 வார்டுகளின் மக்கள் தொகை 48,495. நகராட்சியின் எல்லை 6.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த நிலையில் தற்போது தற்போது
சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சியை இணைத்ததன் மூலம்
காஞ்சிரங்கால் ஊராட்சியில் காஞ்சிரங்கால், அரசனி கீழமேடு, எம்.ஜி.ஆர்., நகர், அசிசிநகர், அரசனிபட்டி, இலந்தக்குடிபட்டி, காமராஜர் நகர், சஞ்சய் நகர், டி.புதுார், தென்னலிவயலை சேர்ந்த 8.60 சதுர கிலோ மீட்டர் பரப்பும், வாணியங்குடி ஊராட்சியில் வாணியங்குடி, கீழ, மேல வாணியங்குடி, இந்திரா நகர், அண்ணாமலைநகர், கூத்தாண்டன், அழகு மெய்ஞானபுரம், ஆயுதப்படை குடியிருப்பு, குறிஞ்சிநகர், அண்ணாநகர், சீனிவாச நகர், சமத்துவபுரம், பழமலைநகர், பையூர், காட்டுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 14.37 சதுர கிலோ மீட்டர் பரப்பும் இணைக்கப்படும்.இதன் மூலம்
சிவகங்கை நகராட்சியின் எல்கை 39.94 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். மக்கள் தொகையும் 83,366 ஆக கணக்கிடப்படும். அரசின் விதிகளுக்கு உட்பட்டு இனி சிவகங்கை நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 36 ஆக உயரும் என்கின்றனர்
சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக எத்தனை வார்டுகள் மாறினாலும் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அவல நிலைகள் எப்போதும் மாறப்போவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சிவகங்கை நகராட்சி நிர்வாகப் பணி அதிகாரியாக தற்போது முத்து (ME) என்பவர் இருக்கிறார்.
நகராட்சிகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுதல்.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துதல்.
குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு, மற்றும் கட்டிட அனுமதி போன்ற நகர்ப்புற அடிப்படை சேவைகளை உறுதி செய்தல்.
குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நகராட்சிக்கு சொந்தமான திட்டங்களில், தண்ணீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை, அல்லது கட்டிடங்கள் மற்றும் சாலைகளின் பராமரிப்பு போன்ற இயந்திரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பணிகளை
போன்ற
நகராட்சிக்கு சொந்தமான திட்டங்களில், தண்ணீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை, அல்லது கட்டிடங்கள் மற்றும் சாலைகளின் பராமரிப்பு போன்ற இயந்திரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான நகராட்சியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அவல நிலைகளை எதையுமே கண்டுகொள்ளாத சிவகங்கை நகராட்சி

முத்து M E சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் குளுகுளு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டென்டர்களை எடுக்கும் நபர்களை நகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து டீலிங் பேசுவாராம்! அப்படிப் பேசும் டீலிங்கில் மாதம் எவ்வளவு தான் கல்லா கட்டுவார் என்று ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தற்போது சிவகங்கை நகராட்சிக்கு ஆணையர் இல்லாமல் சென்னையில் இருக்கும் ஒருவரை சிவகங்கை நகராட்சி பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எப்போது வருவார் என்று யாருக்குமே தெரியாது என்றும் அதனால் நகராட்சி நிர்வாக அதிகாரியாக இருக்கும் முத்து ME காட்டில் பணமலை கொட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றர்.
தற்போது சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் சுகாதார சீர் கேட்டால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என அச்சத்தில் பொதுமக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட வீடுகள் மற்றும் ஹோட்டல்கள், நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கடை மற்றும் வீடுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்தையும், இரவில் சாலையோரம் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். அப்படி
சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவு குப்பைகளை பல நாட்களாக சிவகங்கை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றாமல் இருப்பதால் மலை போல் தேங்கி கிடக்கும் கழிவு குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது,
கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் தினமும் அகற்றாத காரணத்தால், குப்பை குவித்துள்ளது.சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையில் மழைநீர் சேர்ந்ததால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.இந்த, குப்பையை நாய்கள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதனால், அப்பகுதியில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.அங்கு வசிப்பவர்கள், நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைகின்றனர்.எனவே, அப்பகுதியில் கொட்டப்படும் குப்பையை அப்புறப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்து பல வருடங்களாக சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதால் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்க கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன, ஆனால் சில இடங்களில் ஆக்கிரமிப்பு, அடைப்பு மற்றும் தூர்வாரப்படாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கும் மற்றும் வெளியேற வழியின்றி பாதிப்பு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத கால்வாய்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால், பல சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் பழைய கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பால் மிகச்சிறியதாகிவிட்டன அல்லது முற்றிலுமாக மறைந்துவிட்டன, இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது. கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய கழிவுநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினந்தோறும் சிவகங்கை சுற்றுவட்டார பகுதியில் இருந்து சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் குறிப்பாக பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பிடம் பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுவதால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் கழிப்பிட வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும்.
சிவகங்கை பேருந்து நிலையத்திற்குள் பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் பொது கழிப்பிட கட்டிடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவுமோ என பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல்
சிவகங்கை நகரங்களில் உள்ள பிரதான சாலைகளின் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக சாலைகளில் நடுவே கூடி நிற்கும் மாடுகள் நிற்பதை சிவகங்கை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பாக சிவகங்கை நக நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் நோய்வாய் பட்டுள்ள தெருநாய்களை சிவகங்கை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்றும் இப்படி இன்னும் சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்வதில் சிவகங்கை நகராட்சி அதிகாரி முத்து முதலிடத்தில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற நிலையில் சீர்கெட்டு கிடக்கும் அவல நிலையை சரி செய்ய நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார் என்பதுதான் வேதனையான விஷயம் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அகற்றவும், புதிய கழிவுநீர் கால்வாய்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

