
திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் பெருமாப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கல்லுகுட்டை நாகாளம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளரும் ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான மாண்புமிகு க. தேவராஜி அவர்கள் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டார் . பின்னர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் தே. மல்லிகா தேவராஜ் துணை தலைவர் தே. பூர்ணிமா தேவராஜ் ,ஒன்றிய குழு உறுப்பினர் யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, மணவாளன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஊராட்சி செயலாளர் வே. அருள் ,மக்கள் நல பணியாளர் பழனி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

