
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடி மாத மலை வளம் வேண்டி 17 ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சிகலயம், மொலப்பாறை, பால்குடம், தீச்செட்டி, தீ மிதித்தல் மற்றும் செவ்வாடை பக்தர்கள் கரகம், பம்பை, சிலம்பாட்டத்துடன், ஏலகிரி மலை அத்தனாவூர் விநாயகர் கோயிலிருந்து ஊர்வலமாக அத்தனாவூர் காளியம்மன் கோயில் அருகில் வழிபாட்டு மன்றம் வந்தடைந்தது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு நாடக ஆசிரியர் மலையான் தலைமையிலும் சாமு சின்னம்மாள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் ஐந்து வகையான அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீீ கிரிவேலன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.

