
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சியில் இன்று தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு அரசு துறை சார்ந்த திட்டங்கள் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்தல் போன்றவை இந்த முகாமில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் கொண்டு வந்த மனுவை துறைவாரியாக அரசு அதிகாரிகளிடம் கொடுத்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்தனர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக சோலையார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெயா, ஊராட்சி மன்ற தலைவர் அனுமந்தன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி சாந்தன், வேட்டப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.