
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூர் தொடக்கப் பள் ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். ஆம்பூர் எம் எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராககலந்து கொண்டுஸ்மார்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் மகாதேவன், வட்டார கல்வி அலுவலர்கள் தென்னவன், பீட்டர், முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஊராட் சித் தலைவர் கோவிந்தன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சுவிதா, மாதனூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயசுதா உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார். ஸ்மார்ட் வகுப் பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறை அமைக்க நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.