
பள்ளிப்பட்டு அருகே 1500 ஆண்டுகள் பழைய திருமலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் பள்ளிப்பட்டு மார்ச் -11 பள்ளிப்பட்டு அருகே திருமலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பழைய கொளத்தூர் கொசஸ் தலை ஆற்றின் கரைப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணா தேவராயர் ஆட்சிக்காலத்தில் திரிபுர சுந்தரி சமேத திருமலீஸ்வரர் கோயில் கட்டப்பட்டதாக இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
இருப்பினும் காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்துகாணப்பட்டது இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணியைச் சேர்ந்த சேஷன்- யக்னபிரியா தம்பதி கோயிலுக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முன் வந்தனர். கிராம பொதுமக்கள் உதவியுடன் சிதிலமடைந்த கோயில் கோபுரம் விமான கோபுரங்கள் அம்மன் சன்னதிகள் கல் மண்டபம் கோயில் சுற்றி கல் மண்டபம் சுற்றுச்சுவர் புதுப்பித்து கலைநுட்பத்துடன் சிலைகள் அமைத்து வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட கோயில் திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்றன.
இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை 5 நாட்கள் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து 20 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் நித்திய ஹோம குண்டம் பூஜைகள் செய்தனர். விழாவில் 5ம் நாளான நேற்று காலை யாக பூஜைகள் மஹா பூர்ணாஹுதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு கூறியிருக்க சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் நமச்சிவாயா பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து திருமலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
மாலை அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

