
வேலூர் மாவட்டம் காட்பாடி- சித்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலை ஆமை வேகத்தில் சீரமைப்பு பணியினால், நடந்துச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம்
புழுதிப் பறக்கும் சாலையால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வழியாகச் செல்லும் கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில், காட்பாடி அடுத்த கல்புதூர் மெட்டுக்குளம் ஆகிய பகுதிகளில் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது.
இரண்டு வழிச்சாலையில் ஒருப் பகுதி முழுமையாக தோண்டப்பட்டு அதில் ஜல்லிகற்கலால் போட்டு நிரப்பிவிட்டு அதன் மீது தார் ஊற்றாமல் அப்படியே விட்டுவிட்டுள்ளனர்.
இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் சாலையில் செல்லும்போது புழுதி பறந்து வாகனம் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஜல்லி கற்களை சாலையில் முழுமையாக ஆங்காங்கே கொட்டி இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அவல நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு கல்புதூர் பகுதியில் மின்சார துறையில் பணிபுரியும் கரசமங்களத்தைச் சேர்நத் அருள்ஜோதி என்ற பெண் நடந்து சென்று சாலையை கடக்க முயன்றபோது, புழுதி பறந்த நிலையில் அருள்ஜோதி சாலையை கடப்பது தெரியாமல் கண்டெய்னர் லாரி மோதியதில் அருள் ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காட்பாடி காவல் துறையினர் அருள் ஜோதியின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அடுக்குமரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியினால் நடந்து சென்ற பெண் வலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் சாலை அமைக்கும் பனியை பாதுகாப்பு வசதியோடு சாலை அமைக்க வேண்டும் எனவும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

