
திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தாய்மொழி என்பது தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து.
ஒரு மொழியை கட்டாயமாக திணித்தால் அது பகை உணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித் திணிப்பால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு, நம் பக்கத்திலேயே இருக்கிறது”
ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்?
அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம், அவரால் பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடும் கேட்கிறது.
லட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்”

