
‘தங்க கைகளை கொண்டவர்’ எனப் போற்றப்படும் ரத்த தானத்தில் சிறந்த ஜேம்ஸ் ஹாரிசன்(88) ஆஸ்திரேலியாவில் காலமானார். 18 வயதில் ரத்ததானம் செய்ய தொடங்கிய அவர், தன் 81 வயது வரை தொடர்ந்தார். இவரது ரத்தத்தில் Anti-D என்ற மிக அரிதான ஆன்டிஜென் உள்ளது. இது குழந்தைகளின் உயிரை பறிக்கும் ரத்தநோயை (HDFN) தடுக்கவல்லது. தன் ரத்த தானத்தின் மூலம், இவர் இதுவரை 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

