
நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நான்காவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நீர்வரத்து குறைந்த நிலையில் குளிக்க அனுமதிக்கப்படாதது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்ததைஅடுத்து நான்கு நாட்கள் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவு.

