
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீமான் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது.
சீமான் மீதான பாலியல் வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருதரப்பும் சுமுக தீர்வை எட்ட ஒரு வாய்ப்பு கொடுத்து ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சீமானின் மேல்முறையீட்டு மனு மீது விஜயலட்சுமி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

