
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் காந்தியார் தெருவை சேர்ந்த சம்மந்தம் என்பவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புரட்சிமணி இவர்களின் பரிந்துரை பெயரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜிகே வாசன் நியமனம் செய்துள்ளார்.
தொடர்ந்து மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன் அவர்களையும், மாவட்ட தலைவர் புரட்சிமணி அவர்களையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்

