
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டுத் தேர்வினை நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் காத்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் எதிர்காலமும் நிச்சயம் சிறப்பாக அமையும். அதற்கான படிக்கட்டாக இந்தத் தேர்வு அமைந்திருக்கிறது. உங்கள் இத்தனை ஆண்டு கால கனவுக்கும், கடின உழைப்புக்கும் நற்பலன்கள் கொடுப்பதாக இந்தத் தேர்வு அமையட்டும்.
தனித்திறன் படைத்த நீங்கள் ஒவ்வொருவரும், இந்தத் தேர்வுகளின் மூலம், உயர்கல்வியில் தங்களுக்கு விருப்பமான துறைகளை நோக்கிப் பயணப்படவும், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பல சாதனைகள் படைக்கவும், எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

