
10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீயில் கருகின் நாசம்
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி இரயில்வே கேட் அருகாமையில் லத்தேரி வசலாப்பாக்கம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகின்றது
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தொழிற்சாலையின் கூரையின் மேல் திடீரென புகை கசிந்து வந்துள்ளது புகை கசிந்து திடீரென மளமளவென தீப்பற்றி எரிய துவங்கியது உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காட்பாடி தீயணைப்பு துறை குழுவினர் சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இந்த தீ விபத்தால் ஊதுபத்தி கம்பெனியில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீயில் கருகின் நாசமாகியுள்ளது
மேலும் இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது மின் கசிவு காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து லத்தேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

