திருத்துறைப்பூண்டி பகுதியில் 476 கிலோ குட்கா பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தவர் கைது, குட்கா பொருட்கள் பறிமுதல்..

திருத்துறைப்பூண்டி பகுதியில் 476 கிலோ குட்கா பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தவர் கைது, குட்கா பொருட்கள் பறிமுதல்..

திருத்துறைப்பூண்டி மார்ச், 03-
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் கூலிப் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று திருத்துறைப்பூண்டி உட்கோட்டம். திருத்துறைப்பூண்டி காவல் சரகம், மருத்துவமனை தெருவில் வசித்துவரும் சங்கர், த/பெ.ரெகுநாதஜி, திலோஜிகிராமம், கலோரோ மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் என்பவர் தனது எலக்டிரிக்கல் குடோனில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் பொருட்களை, சேமித்து வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி, திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் மேற்கண்ட சங்கருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 476 கிலோ எடையுள்ள (மதிப்பு ரூ.6,42,000/-) குட்கா மற்றும் கூலிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் பதுக்கிவைத்திருந்த சங்கரை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்ததில் அவர் பெங்களுருவில் இருந்து நேரடியாக குட்கா பொருட்களை வாங்கி வந்து திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்து சங்கர் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருவாருர் மாவட்டத்தில் இளம் வயதினரின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்துதல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரித்துள்ளார்கள்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *