
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு காளையார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் மறவமங்கலம் மற்றும் சாத்திரசன்கோட்டையில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஒன்றிய கழக செயலாளர் யோக.கிருஷ்ணகுமார் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

