
பேரணாம்பட்டு அருகே நிலத்தில் 12 அடி நீளம் மலைப்பாம்பு பிடிப்பு, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு இராஜக்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தகுப்பம் கிராமத்தில் குப்பாம்மள் என்பவர் விவசாயம் செய்து நிலத்தில் மாட்டு தீவனம் பயிர் வைத்து வளர்த்து வருகிறார்.
நேற்று நிலத்திற்க்கு சென்று மாட்டு தீவனம் அறுக்க சென்றுள்ளார்.அப்பொழுது நிலத்தில் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று எதையோ விழங்கி விட்டு நெளிந்நு கொண்டு இருந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்பாம்மள் உடனே பேரணாம்பட்டு வனத்துறையினருக்கும் வருவாய் துறையினர்க்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் பேரணாம்பட்டு வனவர்கள் இளையராஜா, மாதேஸ்வரன், முரளி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நவின் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலத்தில் இருந்த மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
மேலும் மலைப்பாம்பை பார்க்க அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

