தூத்துக்குடி மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம் நீக்கும் பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம் நீக்கும் பயிற்சி

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பிப்ரவரி 28ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மன அழுத்தம் நீக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி நகரின் மிக பிரபல மனநல மருத்துவர் எஸ்.சிவசைலம் கலந்து கொண்டு காவலர்களுக்கு சிறப்பு பயிற்சியளித்தார்.

தியானம், யோகாசனங்களை தொடர்ந்து செய்து வந்தால் மனஅழுத்தம் குறைந்து மனஅமைதி பெறுவதுடன் சகிப்புத்தன்மை, பொறுமை, பிரச்சனைகளை சீராக கையாளும் திறன், சரியான முடிவுகளை எடுக்கும் பண்புகள் போன்றவை வளரும் என்று கருத்தரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் கூறுகையில் காவலர்கள் தினந்தோறும் எண்ணற்ற மனஅழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தத்தை குறைத்து அவர்களை மேலும் திறம்பட பணியாற்ற மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, நேர்மறை எண்ணங்களை மேற்கொள்வது, தேவையான ஓய்வு எடுத்து கொள்வது போன்றவைகளை செய்வதால் பணித்திறன் மேம்படுவதுடன் காவலர்களின் மனநலன் காக்கப்படும் என்றார்.

100க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் திருமதி. மீகாராம் செய்திருந்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *