
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
கொத்தங்குடி ஊராட்சியில் தவறுதலாக வழங்கப்பட்டவை ரத்து செய்ய வலியுறுத்தி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியம் கொத்தங்குடி கிராமத்தில் தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து மாற்று இடம் வழங்கிடவும் கிராம மக்களின் பொது பயன்பாட்டுக்கான இடத்தை உத்திரவாதப்படுத்திட கோரியும் மற்றும் கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வட்டாசியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது…
விதொச மாநிலச் செயலாளர்
எஸ் பிரகாஷ் மாநிலக் குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவனேசன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தர்மதுரை மற்றும் கிராம நிர்வாகிகள் இளவரசன், ஜெயபால், பாஸ்கரன், சுரேஷ் மற்றும் மணிகண்டன், ராஜா, புஷ்பராஜ், முனுசாமி, ராமலிங்கம் உள்ளிட்டோர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

