
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது உண்மைதான் – 27 மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 5 மருத்துவர்கள் உள்ளனர்,
உரிய முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு பற்றாக்குறை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக எம்பி சசிகாந்த் செந்தில் பேட்டி..
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவள்ளூர் நாடாளுமன்ற எம்பி சசிகாந்த் செந்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்,
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள்,
நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்,

அதேபோன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் அதை விரைவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிப்பது குறித்து தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்,
பொதுவாக 27 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஐந்து மருத்துவர்கள் உள்ளதாகவும் அதை உரிய முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்,
அதேபோன்று திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டமைப்புகளும் ஏற்படுத்த ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் பணிகள் துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்,
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரேவதி, துணை முதல்வர் திலகவதி மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்,.

