
திருவள்ளூரில் காலாவதியான கூல்டிரிங்ஸ் டப்பாவுடன் காவல் நிலையத்திற்கு 3 நாட்களாக அலையும் தம்பதி: காலாவதியான கூல் ட்ரிங்க்ஸ் விற்பனை செய்த கடை மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை முறையாக காவலர்கள் விசாரணை செய்யவில்லை என புகார்
திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டுதெருவை சேர்ந்த பாக்கியா மதன்குமார் தம்பதியரின் குழந்தை திருவள்ளூர் நிகேதன் பள்ளியில் பயின்று வரும் நிலையில் பாக்கியா தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார், அதுபோல் கடந்த 24ஆம் தேதி பள்ளியில் எதிரே உள்ள கந்தசாமி ஸ்டோர்ஸ் என்ற கடையில் 20 ரூபாய் கொடுத்து இரண்டு டாட்டா குளுக்கோஸ் கூல்ட்ரிங்ஸ் வாங்கியுள்ளனர்
இதில் ஒரு கூல் ட்ரிங்க்ஸ் பாக்கியா குடித்த நிலையில் கெட்டு போனது போன்று இருந்ததால் கூல்டிங்ஸில் மேல் பகுதியில் இருந்த காகிதத்தை முழுவதுமாக பிரித்து பார்த்த போது கூல்ட்ரிங்ஸ் கெட்டுப் போய் இருந்தது தெரிய வந்துள்ளது
இதனை அடுத்து கூல்ட்ரிங்க்ஸ் டப்பாவில் இருந்த தேதியை பார்த்தபோது அது மூன்று நாட்களுக்கு முன்னரே அதாவது 21ஆம் தேதியே காலாவதி ஆகியிருந்தது தெரிய வந்ததை அடுத்து கடை ஊழியர்களிடம் இது குறித்து கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது
இதனிடையே பாக்கியாவிற்க்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் இது குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் பாக்கியா புகார் அளித்துள்ளார்
புகார் அளிக்கப்பட்டு இரண்டு தினங்கள் ஆகியும் காவலர்கள் காலாவதியான கூல்டிரிங்ஸ் விற்பனை செய்த கந்தசாமி ஸ்டோர் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் பாக்கிய என்னைப் போன்று மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு திருவள்ளூர் நகர காவலர்கள் முறையான விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்
திருவள்ளூரில் காலாவதியான கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலுடன் இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு நீதி கேட்டு திரியும் தம்பதியின் நிலைமை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

