வகுப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

வகுப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சீனி அகமது தலைமையிலும், தமுமுக மாவட்ட செயலாளர் இப்னு, மாவட்ட செயலாளர் அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி தாகா மைதீன் ஆகியோர் முன்னிலையில்
வகுப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது,

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள், வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நபர்களை தண்டிக்க இருந்த கடுமையான தண்டனைகளை இலகுவாக்கி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்க ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டம் 2024 மசோதா வழி வகுக்கின்றது, மாநிலத்தின் சுயாட்சியை பறிக்க பாஜக அரசு விரும்புகிறது என்பதை காட்டுகிறது, மேலும் வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் தலையிட விரும்புகிறது, இந்த வக்பு திருத்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர், இவ்வாறு பேசினார்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *