
வேலூர் மாவட்டம் காட்பாடி பார் அசோசியேஷன் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட வரைவு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு பார் கவுன்சில் என உள்ளதை மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் மொழி ஆதிக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வழக்கறிஞர்கள் சேம நல நிதி 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காட்பாடி நீதிமன்றம் முன்பு காட்பாடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் 30 வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் விரைவில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு குழுமம் (JAC) சார்பில் 20 ஆயிரம் வழக்கறிஞர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தகவல்.

