
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலைகளுக்கு பட்டமளிப்பு மற்றும் கலை விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் செயலாளர் ராஜேஷ் ராஜா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பழனி செல்வம் வரவேற்று பேசினார். சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், ஓய்வு பெற்ற பேராசிரியர் கேப்டன் குருசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 125 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் ஆறுமுக குமார் நன்றி கூறினார்.

