
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன நாகபூண்டி பகுதியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆர்.கே.பேட்டை ஒன்றிய கழக செயலாளர் நாகபூண்டி கோ. குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான திருத்தணி கோ.அரி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கழக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், திருத்தணி ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி, திருத்தணி நகர செயலாளர் சௌந்தர்ராஜன், பள்ளிப்பட்டு பேரூர் செயலாளர் ஜெயவேலு, ஒன்றிய பொருளாளர் ராஜீவ் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் சுஜாதா, பழனி மாவட்ட பிரதி ஹேமாவதி குமரேசன், பி.ஆர் பள்ளி கார்த்தி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

