
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நகர, ஒன்றிய திமுக சார்பில், மத்திய அரசின் மும்மொழி அமல்படுத்தும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.எம்.ஜோசப், பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் மும்மொழித் திட்டத்தை எதிர்த்து கோஷமிட்டனர். தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்து ஆலடி எழில்வாணன் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆலங்குளம் தொழிலதிபர் செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் சாமுவேல்ராஜ், வாசு, பகுத்தறிவு பாசறை ராசையா, அல்போன்ஸ், மகளிரணி சரஸ்வதி பாஸ்கரன், சாலமோன், பிளஸ்ஸி, ஜெயபாலன் , அல்போன்ஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிறைவில் நகரப் பொருளாளர் சுதந்திரராஜன் நன்றி கூறினார்.

