
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 55 வார்டுகளுக்கான மாமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் அமைதியாக நடைபெற்று வந்த நிலையில் மதிமுக கவுன்சிலர் ராதா சங்கர் எதிர்பாராத விதமாக பதாகையை ஏந்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 கோடி ரூபாய் – வீணடிக்காதே!
“வீணடிக்காதே, வீணடிக்காதே! 28 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வீணடிக்காதே!” என்று மாமன்ற கூட்டத்துக்குள் பதாகை ஏந்தி கோஷமிட்டார் மதிமுக கவுன்சிலர் ராதா சங்கர்.
இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் முன்னிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுக கவுன்சிலர் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தது முக்கிய அம்சமாக மாறியது.
வெளிநடப்பு செய்யவில்லை – தொடர்ந்து கலந்துகொண்டார்
தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பதாகையை ஏந்தி கோஷமிட்ட கவுன்சிலர்,
கூட்டத்தில் இருந்து வெளியேறாமல்,
தொடர்ந்து அமர்ந்து விவாதங்களில் பங்கேற்றார்.

