
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்களின் 93-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் கழக நிர்வாகிகள் வ.வேலுசாமி, பெ.குழந்தை வேலு, மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவண புவனேசுவரி, மதிச்சியம் சிவக்குமார், மா.ஜெயராம், எல்லிஸ் நகர் பகுதி செயலாளர் பி.கே.செந்தில், மேலமாசி வீதி பகுதி செயலாளர் சு.பா.கண்ணன், ஆரப்பாளையம் பகுதி செயலாளர் எஸ் எஸ் மாறன், சுகாதார குழு தலைவர் ஜெயராஜ், இளைஞரணி செயலாளர் சௌந்தர், முத்து கணேசன், பிடி மணிமாறன் மாமன்ற உறுப்பினர் கார்த்திக், அயலக அணி சையது மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

