
தென்காசி, பிப். 28
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழக பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு கருதி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல செயலாளர் ராஜமன்னார் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பு, மேற்கு மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல அமைப்பாளர் தலித் தர்மா, தென் மண்டல தலைவர் சுரேஷ், துணைச் செயலாளர் இளஞ்செழியன், தமிழ்நாடு ஆதிதிராவிட சமூக கூட்டமைப்பு தலைவர் அரசு பிரபாகரன், பொதுச் செயலாளர் முத்து மணி, துணைப் பொதுச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சிவகிரி நகர பொருளாளர் டேனியல், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய தலைவர் குமார், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் அய்யாதுரை, தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயகுமார், ஆலங்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரஞ்சித் நன்றி கூறினார்.

