சென்னை, தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.

மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், , குத்துவிளக்கேற்றி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி,புதூர் பூமிநாதன்,நலப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், மருத்துவமனை முதன்மையர் அருள் சுந்தரேசு குமார், மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

