கோல்டன் விசா!

கோல்டன் விசா!

ட்ரம்பின் ஆப்படிக்கும் அறிவிப்பால் அதிர்ச்சி!
ஐம்பது கோடி ரூபாய் செலுத்துவோர் மட்டுமே பலனடைவர்!

நியூயார்க், பெப் 27 : அமெரிக்காவில் கோல்டு கார்டு விசா கொண்டு வரப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கோல்டு கார்டு விசா என்றப் பெயரில்,
அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதிப்படி, ஐந்து மில்லியன் டாலர் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும்.

இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும்.

அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் இருப்பதோடு, அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும்.

ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை.

மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிசினஸ் பின்னணி இருக்க வேண்டும்.

நீங்கள் ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஐம்பது கோடி ரூபாய் கட்ட வேண்டும்.

இனி முதலீட்டாளர்கள் விசா கிடையாதாம்.

ஏற்கனவே, அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கே முதலீடு செய்யும் விதமாக, அங்கேயே வாழ்ந்து வரி கட்டும் விதமாக, வேலைகளை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கான விசா அங்கே அமலில் உள்ளது.

இதை EB – 5 விசாக்கள் என்று அழைப்பார்கள்.

EB – 5 விசாக்கள் 1990 இல் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை உருவாக்க கொண்டு வரப்பட்டது.

குறைந்தபட்சம் பத்து நபர்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் சுமார் ஒரு மில்லியன் டாலர் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும்.

இந்த முதலீட்டாளர்களுக்கான விசா நீக்கப்பட்டு தற்போது அங்கே கோல்டு கார்டு விசா அமலுக்கு வர உள்ளது.

அதோடு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோல்டு விசா என்பது, இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் EB – 5 விசாக்கள் மூலம் ஒரு மில்லியன் டாலர் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே நிரந்தர விசா கிடைக்கும்.

அதாவது EB – 5 விசாக்கள் வாங்க எட்டு கோடி ரூபாய் கட்டினால் போதும்.

ஆனால் இப்போது புதிய விதி காரணமாக ஐம்பது கோடி ரூபாய் வரை கட்ட வேண்டும்.

இதனால் இந்தியர்கள் எளிதாக இந்த விசாவை வாங்க முடியாது.

ஏற்கனவே EB – 5 விசாக்கள் வாங்க திட்டமிட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிகிறது.

அப்படி சரிவதால் போக போக ஐந்து மில்லியன் டாலர் மதிப்பு சரியும்.

இதனால் இந்தியர்கள் செலுத்த வேண்டிய தொகையின் இந்திய மதிப்பு தொடர்ந்து உயரும்.

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ‘கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்கள், செல்வந்தர்களாக இருப்பார்கள், அவர்கள் வெற்றி பெற்ற நபர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் நிறைய பணம் செலவழிப்பார்கள். எங்களுக்கு நிறைய வரிகளை செலுத்துவார்கள். அமெரிக்காவில் நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள் இதனால் அமெரிக்கா மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். அடுத்த சில நாடுகளில் ஒரு கோடி கோல்டன் விசாக்களை விற்க முடிவு செய்துள்ளோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்’ என்று கூறி உள்ளார்.

அடுத்தடுத்து அதிரடியாக பல அறிவிப்புகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டு வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *