
சிவகங்கை நான்காவது புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கோளரங்கம் அமைக்கப்பெற்று அரங்கம் நிறைந்து பார்வையிட்டு வருகின்றனர்.
கோளரங்கம் அரங்கினை பிப்ரவரி 21 அன்று மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வைத்தனர். காலை 10 மணி முதல் இரவு பத்து மணி வரை பெருந்திரள் வாசிப்பு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கலைக்குழுவினரின் நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் சொற்பொழிவு கவிதை அரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆறாவது நாளான இன்று வரை 7000க்கு அதிகமான மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஆர்வத்தோடு கோள்களின் இயக்கம் செயற்கைக்கோள் செயல்படும் விதம் பூமியில் உள்ள உயிரினங்கள் அழிந்து எவ்வாறு புதிய உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன என்பது குறித்த முப்பரிமான வீடியோக்களை மாணவ மாணவிகள் கண்டு வியந்தனர்.
கோளரங்கள் குறித்த அறிவியல் விளக்கங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி சிறப்பாக செய்து வருகிறார். அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் பிரபு மணவாளன் அனந்தகிருஷ்ணன் ராஜசரவணன் அசோக் பாரதி கணேசன் பாண்டி தாமஸ் ஆரோக்கியமேரி வானவில் மன்ற கருத்தாளர்கள் மேற்பார்வையிடுகின்றனர்.
ஆறாவது நாளான இன்று வரை 7000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வானியல் குறித்த கோளரங்கத்தை உற்சாகத்தோடு அரங்கம் நிறைந்து பார்த்து வருகின்றனர்.

