திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்
திருப்பத்தூர்:பிப்:27, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியும், திருப்பத்தூர் ரோட்டரி சங்கமும் இணைந்து பிளாஸ்டிக்கைக் கைவிடுவோம் மஞ்சள் பையைக் கையில் எடுப்போம் என்னும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாட்ட ஆளுநர் மதிப்பிற்குரிய Rtn. M. ராஜன்பாபு, மஞ்சள்பையைக் கையில் எடுக்க வேண்டிய தேவைகள் குறித்துச் சிறப்புரையாற்றினார்.

கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் தா.மரிய அந்தோணி ராஜ் ச.ச., அடிகளார் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒவ்வொரு மாணவ – மாணவியரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்நிஇழ்ச்சிக்கு வரவேற்புரையையும், தலைமையுரையையும் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.PHF. G.வெங்கடேசன் உரையாற்றினார். NSS , AICUF, RRC அமைப்புகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி மாணவ – மாணவியர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் க. மோகன்காந்தி நன்றியுரை ஆற்றினார். ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த K.C. எழிலரசன், K.M.சுப்பிரமணியம் , மருத்துவர் லீலா சுப்பிரமணியம், வ.புரட்சி, பாரதி, N.வெங்கடாசலம், M.திருநாவுக்கரசு, P.அருணகிரி, P.சோமு , சுபாஷ், பன்னீர் செல்வம், வழக்கறிஞர் மனோகரன்,எல்.ஆனந்தன், ஆசிரியர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் உ. ரமேஷ், முனைவர் நெப்போலியன், முனைவர் ஜூலியன், பேரா. வ. மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.

