க.பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.

திருவாரூர் பிப்,26-திருவாரூர் மாவட்ட நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் குமாரலிங்கபுரத்தில் உள்ள கன்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஏழு பேரை பணியிட நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழக முழுவதும் இன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் சிவபாலன் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் ராஜேந்திரன் சங்க ஆலோசகர் பந்த் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்