திருவாரூர் மாவட்ட செய்தியாளர் – க.பாலகுரு

திருவாரூர் பிப்,26-முன்னாள் முதல்வர்
புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக..
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடுவங்குடி பகுதியில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 77-வது பிறந்த நாள் விழா குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது..
நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி பி ஜி அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்ட விழாவில்.. தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.காமராஜ் மற்றும் அவரது மனைவியுடன் கலந்து கொண்டார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் திரு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்…
“‘அம்மாவின் ஆட்சியை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்திட முடியாது.. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என சிலர் சொல்லலாம்.. ஆனால், அதிமுக ஆட்சி வரப்போகிறது.. எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரப்போகிறார்….
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்பிகிறார்கள்..
தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அம்மாவின் பிறந்த நாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்..
தேர்தலுக்கு முன்னர் ஸ்டாலின் 525 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார்.. அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது… ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.. ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து தங்கத்துக்கு தாலி திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்…. லேப்டாப் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்…. அம்மா கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் நிறுத்தி விட்டார்கள்….
இந்த ஆட்சியில் புதியதாக எந்த திட்டமும் இல்லை… மிக்ஸி, ஃபேன் கிரைண்டர் போல… அம்மா ஆட்சியில் கொண்டு வராத திட்டமே கிடையாது…
திமுக ஆட்சிக்கு விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது அத்தியாவசிய விலைப் பொருட்கள் அனைத்தும் உயர்ந்து கொண்டே இருக்கிறது… கேட்ப தற்கு ஆள் இல்லை என்று நினைக்கிறார்கள்…
இன்று மின்சார கட்டணம் எங்கு போய் நிற்கிறது… மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.. ஒவ்வொரு வருடத்திற்கும் ஆறு % ஏறுமாம் எவ்வளவு மோசமான நிலை இன்றைக்கு இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் விவசாயத்தை செய்ய முடியும் என நிலையை உருவாக்கிக் கொடுத்தவர் எடப்பாடியார்…. மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்…” என பேசினார்.
அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில்… நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம. குணசேகரன், குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் செருக்குடி ராஜேந்திரன், வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.