ஆண்ட்ராய்டு மொபைலுக்கு அடிமையாகும் சிறார்கள்.. கட்டுப்படுத்துவதும்.. பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆண்ட்ராய்டு மொபைலுக்கு அடிமையாகும் சிறார்கள்.. கட்டுப்படுத்துவதும்.. பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில், 0 முதல் 2 வயதான குழந்தைகளுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் ஸ்க்ரீனை காட்ட கூடாது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள்.. பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். அதன்பின் 2 முதல் 5 வயதாகும் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் வரை மட்டுமே மொபைல் காட்டலாம் என்றும், 5 வயதிற்கு மேல் 2 மணி நேரம் வரை அதிகபட்சமாக மொபைலில் வீடியோ பார்க்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புதுக்கோட்டை அருகே செல்ஃபோனை உடைத்ததால் ஏற்பட்ட சண்டையில் கிணற்றில் குதித்த தங்கையும், அவரை காப்பாற்ற குதித்த அண்ணனும் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளின் கைகளில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை கொடுக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் அண்ட்ராய்டு மொபைல் போன் பயன்பாட்டுக்கு சிறார்கள் அடிமையாகிவிடுகின்றனர்.

இதற்கு நாம்தான் காரணம். மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறோம். அதேபோல் மொபைலை காட்டினால் நன்றாக சாப்பிடுகிறார்கள் என்று அதனை பின்பற்றிவிடுகிறோம். ஆனால் மொபைலை பார்க்க தொடங்கிய பின், மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற தோன்றும் வகையில்தான் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்களில் குழந்தைகள் தங்கள் கைகளாலே பல்வேறு சமூக வலைதளங்களில் நுழைந்து குறிப்பாக சொன்னால் youtube வீடியோ, கார்ட்டூன் உள்ளிட்டவை அதிகமாக பார்க்கும் போது, மொபைலில் தானாக வந்துவிடும். அதேபோல் குழந்தைகள் ஒரு வீடியோ பார்த்தால், நிச்சயமாக ஒரு வீடியோவுடன் நிறுத்த மாட்டார்கள். ஒரு வீடியோவை பார்க்கும் மகிழ்ச்சியால் நமது மூளையில் dopamine சுரக்கும். அதனால் அந்த மகிழ்ச்சி குறையும் போது, அடுத்த வீடியோவை பார்க்க தோன்றும். இது கிட்டத்தட்ட அடிக்‌ஷனாக மாறிவிடும்.

இதனை குழந்தைகளின் பெற்றோர்கள் உணர்ந்து குழந்தையை மீட்டெடுக்க நினைக்கும் போது, சிக்கலான சூழல் உருவாகிவிடுகிறது. அதனால் முடிந்த அளவிற்கு குழந்தைகள் கைகளில் மொபைல் கொடுக்காமல் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 2 வயது வரை மொபைல் ஸ்க்ரீன் காட்டவே தேவையில்லை. அதிகபட்சமாக வீடியோ கால் பேசலாம்.

அதன்பின் 2 முதல் 5 வயது வரை ஒரு நாளில் ஒரு மணி நேரம் வரை மட்டுமே மொபைல் ஸ்க்ரீன் காட்டலாம். அதனையும் 15 நிமிடங்களாக பிரித்து காட்ட வேண்டும். 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் 2 மணி நேரத்திற்கு மேல் மொபைல் ஸ்க்ரீன் காட்டக் கூடாது. தொடக்கம் முதலே ஒழுக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். குழந்தைகளுக்கு அதிகளவில் விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு மொபைல் பார்க்க கூடாது என்று சொல்வதை விடவும், அவர்களுக்கு மாற்றாக ஒரு விஷயத்தை கொடுத்தால் சிறப்பு. அதேபோல் குழந்தைகளுக்கு மொபைல் ஸ்க்ரீன் காட்டும் போது, ஒரு மணி நேரம் முடிவடைந்த பின் உடனடியாக ஆஃபாகும் வகையில் செட்டிங்ஸ் அமைத்து கொள்ள வேண்டும். அதேபோல் குழந்தைகள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் செயலி மூலம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

ஒருவேளை மொபைல் பார்க்கும் நேரத்தை விடவும் கூடுதல் நேரம் பார்த்தால், உடனடியாக சில நாட்களுக்கு மொபைல் கிடையாது என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும். எந்த வகையில் மொபைல் விஷயத்தில் மட்டும் குழந்தைகளுக்கு தளர்வுகள் அளிக்க கூடாது. அதேபோல் குழந்தைகள் உடலை பயன்படுத்தி விளையாடி வைக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பெற்றோரும் வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *