கேரளாவிலிருந்து, தமிழகத்திற்கு மீண்டும் இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்திய போலீசார் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளாவிலிருந்து, தமிழகத்திற்கு இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில் எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 கண்டெய்னர் லாரிகளை சோதனை செய்ததில், கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ஓட்டுநர்களை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.