ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று நவம்பர் 28 வியாழக்கிழமை ராஞ்சி மொராபாடி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார்.
இந்த நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இன்று ஹேமந்த் சோரன் மேடும் தனியாக பதவியேற்பார் என்றும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவார் என்றும் கூறினார்.
source

