2025 ஐபிஎல் மெகா ஏலம் தொடக்கம் – வீரர்களை எடுக்க போட்டி போடும் அணிகள்!

2025 ஐபிஎல் மெகா ஏலம் தொடக்கம் – வீரர்களை எடுக்க போட்டி போடும் அணிகள்!

2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெறுகிறது.

இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மெகா ஏலத்தில், 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து அதிகபட்சமாக 204 வீரர்களை 10 அணிகளும் ஏலத்தில் எடுக்க முடியும்.

ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு  லக்னோ ஏலம் எடுத்தது. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ரிஷப் பண்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

டேவிட் மில்லரை ரூ. 7.50 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது. இதேபோல் முகமது சமியை ரூ.10 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

இதேபோல் மிட்செல் ஸ்டார்கை ரூ.11.75 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது
ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலம் எடுத்தது.

 


source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *