ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் – இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் – இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் கடந்த 13-ஆம் தேதி 43 தொகுதிகளுக்கும், 20-ஆம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களிலும், பாஜக கூட்டணி 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.


source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *