டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவியை பெற்றுள்ள விவேக் ராமசாமியின் தமிழ்நாட்டு பின்னணி என்ன? – உறவினர்கள் எங்கே உள்ளனர்?

டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவியை பெற்றுள்ள விவேக் ராமசாமியின் தமிழ்நாட்டு பின்னணி என்ன? – உறவினர்கள் எங்கே உள்ளனர்?
விவேக் ராமசாமி

பட மூலாதாரம், Advocate Prasath

படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டில் விவேக் ராமசாமி இந்தியா வந்தபோது எடுத்த போது புகைப்படம். பிரசாத்தின் தாயார் அலமேலு முத்துசாமியுடன் விவேக் ராமசாமி மற்றும் அவரின் மனைவி அபூர்வா.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள டிரம்ப், ‘அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை’ (Department of Government Efficiency – DOGE) என்ற முகமையை உருவாக்கி அதன் தலைமை பதவியில் ஈலோன் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், விவேக் ராமசாமியை ‘தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவரால், ‘தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்’ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள விவேக் ராமசாமி, அமெரிக்காவின் பிறந்தவர் என்றாலும், அவருடைய பெற்றோர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘‘பாலக்காட்டில் வாழும் தமிழ் குடும்பத்தினர் பலர் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். எங்கள் முன்னோரும் அங்கிருந்து வந்தவர்கள்தான்.” என்கிறார் பாலக்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாத்.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *