
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆர்.எஸ். மஹாலில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஜப்பான் ஹிட்டோ-ராய் கராத்தே-டு இந்திய பள்ளியின் 48 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியரின் கராத்தே சாம்பியன் தேர்வு போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகை ஹேமா பிந்து அவர்கள் கலந்து கொண்டு பரிசினை வழங்கினார். ஹன்ஷி ரமேஷ் பாபு இந்திய தலைவர் JSKI, சென்செய் ராதாகிருஷ்ணன் தேசிய நடுவர், சென்செய் மகேஷ்வரன் ஆசிய நடுவர், மணிவண்ணன் ஆசிய நடுவர் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியினை நடத்தினர்.

