
பாஜக ஆட்சியில் அரசியலமைப்புக்கு பாதுகாப்பு இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு
சென்னை: பாஜக ஆட்சியில் அரசியலமைப்பு சட்டத்துக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றபின் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இந்தியாவில் நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறையைத்தான் கடைபிடித்துள்ளோம். நாடாளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில்தான் பாஜக அரசு செயல்படுகிறது. வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதையும் தற்போது பறிக்கப்படுகிறது என முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார்.

