
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், முத்திரை பணியாளராக பணியாற்றும் நாகராஜன் என்பவர் வரும் 30ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியலை தயார் செய்து வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஓசூர் முத்திரை ஆய்வாளர் தமிழ்செல்வன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

