2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி

2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான அதன் முக்கியமான கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

முதலில் நவம்பர் 17 அன்று திட்டமிடப்பட்ட கூட்டம் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது.

அரசாங்க அனுமதி பிரச்சினைகளை காரணம் காட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒரு கலப்பின ஹோஸ்டிங் மாதிரியை நிராகரித்தது.

முன்னதாக, கூட்டத்தில் 12 முழு உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள், அசோசியேட் உறுப்பினர்கள் மற்றும் ஐசிசி நிர்வாகிகள் இன்று (நவம்பர் 29) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒருமித்த கருத்து

ஒருமித்த கருத்து எட்டப்படாததால் கூட்டம் ஒத்திவைப்பு

பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி நேரில் கலந்து கொண்டார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீடியோ கான்பெரன்ஸ் மூலம் பங்கேற்றார்.

விவாதங்கள் ஒருமித்த கருத்தை அடையத் தவறியதால், கூட்டம் நவம்பர் 30க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதைக்கு இரண்டு முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளன. இந்தியாவின் குரூப்-ஸ்டேஜ் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியை நடுநிலையான இடத்தில் நடத்துவது அதில் ஒன்று அவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கலாம்.

இரண்டாவதாக, இந்தியா நாக் அவுட்டுக்கு தகுதி பெறவில்லை என்றால் மட்டுமே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை பாகிஸ்தானுக்கு மாற்றுவது மற்றொரு திட்டமாகும்.

ஒரு வாக்களிப்பு செயல்முறை அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்தும் முடிவை இறுதி செய்யலாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 1996க்கு பிறகு முதல்முறையாக ஐசிசி நிகழ்வை நடத்துகிறது. இதனால், பாகிஸ்தானுக்குள் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக உள்ளது.

நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதில் நம்பிக்கையை வெளிப்படுத்திய நக்வி, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஐசிசியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இந்த நிகழ்வு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9, 2025 வரை திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தீர்மானம் எதிர்பார்க்கப்படுகிறது.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *